×

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

காரைக்குடி, ஜன.22:  காரைக்குடியில் காவல்துறை, மோட்டர் வாகன ஆய்வாளர் அலுவலகம், சாலை பாதுகாப்பு படை மற்றும் ஓவியம் லயன்ஸ் சங்கம் சார்பில் மகளிர் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. சாலை பாதுகாப்புபடை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரகாஷ் மணிமாறன் வரவேற்றார். டிஎஸ்பி அருண் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். லயன்ஸ் மாவட்ட அமைச்சரவை செயலாளர் பாதம்பிரியான், இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம், போக்குவரத்து காவல் துறை இன்ஸ்பெக்டர் விமல்குமார், ஒவியம் லயன்ஸ் சங்க ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி, தலைவர் மலர்சேகர், பொருளாளர் சித்திரை மீனாட்சி, செயலாளர் டெய்ஸ் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். பட்டைய தலைவர் குளசொக்கு நன்றி கூறினார்.

Tags :
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...