பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் சங்கம் போராட்டம்

மானாமதுரை, ஜன.22:  கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், மிளகாய், வாழை, உளுந்து ஆகிய பயிர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட்  ஒன்றிய செயலாளர் ஆண்டி தலைமை வகித்தார்.  பாதிப்புக்குள்ளான விவசாயத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வலியுறுத்தப்பட்டது. ஒரு ஊராட்சிக்கு ஒரு இடம் என்கிற வகையில் நெல் கொள்முதல் மையம் தொடங்க வலியுறுத்தினர்.

மாவட்ட செயலாளர் வீரபாண்டி போராட்டத்தை விளக்கி பேசினார். பின் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். காளையார்கோவில் பஸ் நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், உடையார் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இளையான்குடி தாலுகா அலுவலகத்தில், விவசாய சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் அழகர்சாமி, செல்லமுத்து, சேதுபதி, சந்தியாகு, ராஜு ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>