×

தரமற்ற பணியால் பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்புவனம், ஜன.22: திருப்புவனம் புதூர் பகுதியில் 7 இடங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. சேதமடைந்த சிமெண்ட் சாலையை பெயர்த்து எடுத்து விட்டு மணல் பரப்பி அதன் மீது பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். ஆனால் சிமெண்ட் ரோடு மீதே பேர் பிளாக் கற்கள் பதித்து வருகின்றனர். இதற்கு நகர் காங்கிரஸ் தலைவர் நடராசன் தலைமையில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஒப்பந்தகாரர்கள் பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பி சென்றனர்.

நடராசன் கூறுகையில், சிமெண்ட் சாலை மீதே பேவர் பிளாக் கற்களை பதிக்கின்றனர். ஒரு கோடி ரூபாய்க்கு செய்யப்படும் பணிகள் தரமின்றி நடந்து வருகிறது. திட்டம் குறித்த விளம்பர பலகை எதுவுமே இல்லை. யார் பணிகளை மேற்கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை பணிகள் அதிகாரிகள் கண்காணிப்பின்றி நடந்து வருகிறது. என்றார்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...