காலமுறை ஊதியம் கேட்டு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

சிவகங்கை, ஜன.22:  சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது ஊழியருக்கு ரூ.10லட்சம், உதவியாளருக்கு ரூ.5லட்சம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

பார்வதி தலைமை வகித்தார்.  மாவட்ட பொருளாளர் தாமரைச்செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயமங்களம், சிஐடியூ மாவட்ட தலைவர் உமாநாத், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட செயலாளர் கருணாநிதி மற்றும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர். கல்லல், திருப்புவனம், சாக்கோட்டை, திருப்பத்தூர், மானாமதுரை, சிங்கம்புணரி ஆகிய ஊர்களிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories:

>