×

மறைந்த ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயரை கோவையில் உயர்மட்ட பாலத்துக்கு சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மறைந்த ஒன்றிய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயரை கோவையில் உயர்மட்ட பாலத்துக்கு சூட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோவையில் ஆத்துப்பாலம் – ஒப்பணக்கார வீதி வரை உயர்மட்ட பாலத்துக்கு சி.சுப்பிரமணியம் மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.’நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் சி.சுப்பிரமணியம்’ என முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் முதல்வரின் பத்தியில்; “கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு!

ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா சி.சுப்பிரமணியம்.

அவரது புகழொளியைப் பரப்பிட வேண்டும் என மதிப்பிற்குரிய டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் வைத்த கோரிக்கையை ஏற்று, கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று பெயர்சூட்டும் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags : Union Minister ,C. Subramaniam ,Goa ,Chief Minister ,K. Stalin ,Chennai ,Athupalam ,Opinakkara Road ,Subramaniam ,Bhabhalam ,
× RELATED பீகாரில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற...