கரூர் தாந்தோணிமலையில் கழிவுநீர் மேன்ஹோல் திறந்தே கிடப்பதால் விபத்து அபாயம்

கரூர், ஜன. 22: தாந்தோணிமலை கணபதிபாளையம் பகுதியில் கழிவுநீர் செல்லும் கால்வாயின் மேன்ஹோல் திறந்தே கிடப்பதால் விபத்து அபாயம் ஏற்படும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை பகுதியில் கணதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலை பிரிகிறது. இந்த சாலை நுழைவு வாயில் பகுதியில் சில நாட்களாக வாய்க்கால் ஓடையின் மேற்புற பகுதி அரைகுறையாக திறந்தே கிடக்கிறது. சீரமைப்பு பணிக்காக இவ்வாறு இருந்தாலும் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் இதில் தடுமாறி விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர். அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, பாதுகாப்பு கருதி சிலாப் கொண்டு மூடவும், தேவையான சமயங்களில் திறந்து பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>