கரூரில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கரூர், ஜன.22: கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் இன்று (22ம்தேதி) காலை 10மணி முதல் மதியம் 3மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் படித்த ஆர்வமுள்ள இளைஞர்கள், தங்களின் சுயவிபரக் குறிப்பு, புகைப்படம், ஆதார் அடையாள அட்டை மற்றும் கல்விச்சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன் வந்து கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் 30க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>