வேலாயுதம்பாளையம் அருகே தீராத தலைவலியால் பெண் தற்கொலை

கரூர், ஜன. 22: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே தீராத தலைவலி காரணமாக அவதிப்பட்டு வந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த புகளூர் பாலம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா(30). திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், கடந்த சில ஆண்டுகளாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த சங்கீதா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>