பிஎஸ்என்எல் ஊழியர் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன.22: மதுரையில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் சார்பில் தல்லாகுளம் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் முருகேஷ்பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செல்வின் சத்யராஜ் முன்னிலை வகித்தார். ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியத்தை உடனே வழங்கவேண்டும், ஜனவரி மாத ஊதியத்தை உரிய தேதியில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாநில அமைப்புச் செயலாளர் ரிச்சர்ட், நிர்வாகி வெங்கிடசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>