உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

உசிலம்பட்டி, ஜன.22: மண் அள்ள அனுமதி வழங்கக்கோரி உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தை பேரையூர் பகுதி செங்கல்சூளை தொழிலாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர். ஆர்டிஓ ராஜ்குமார் செங்கல்சூளை  தொழிலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இது சம்மந்தமாக  மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்து, 2 வாரங்களில் நல்ல முடிவு  எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து செங்கல் சூளை தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதனால் உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளர்கள் கூறுகையில், கொரோனா காலம் முதல் இன்றுவரை செங்கல் காளவாசல் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறோம். மேலும் மண் அள்ளுவதற்கு இப்பகுதியில் அனுமதியில்லை. ஆனால் பேரையூர் பகுதியில் 600க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல் உள்ளது, இதனை நம்பி

ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் எங்களின் வாழ்வாதாரத்திற்காக விவசாய நிலங்களில் உள்ள உபரி மண்ணான செம்மண், சவுடுமண், கரம்பை உள்ளிட்ட மண்களை அள்ள அனுமதி தர வேண்டும்’’ என தெரிவித்தனர்.

Related Stories:

>