பாஜ ஊடக பிரிவு செயலாளர் கைது

மதுரை, ஜன.22: மதுரை வீரபாண்டியை சேர்ந்தவர் மணிகண்டன்(40). பாஜ மதுரை புறநகர் மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர். இவர் தங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகக் கூறி, இப்பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கடந்தவாரம் மதுரை எஸ்பி சுஜித்குமாரிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், மணிகண்டன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி, வீரபாண்டி ஊராட்சித் தலைவரின் கணவர் விஜயகுமார் ஊமச்சிகுளம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

இப்புகாரின் பேரில்  ஊமச்சிகுளம் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அவரது மகனை போலீசார் தேடி வருகின்றனர். இவர் பாஜ மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், இவர் மீதான தொடர் புகார்கள் கட்சி தலைமைக்கு சென்றதால் அவரை பதவியிலிருந்து நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>