ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் ஒரு அலுவலக உதவியாளர் பணிக்கு 800 விண்ணப்பம் குவிந்தன

சின்னாளபட்டி, ஜன. 22: ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலர் உதவியாளர் பணிக்கு தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதையடுத்து எம்ஏ, எம்பில், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஏ, பிகாம் படித்த பட்டதாரிகள் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். ரெட்டியார்சத்திரம் மட்டுமி–்றி பழநி, திண்டுக்கல், ஆத்தூர், செம்பட்டி, சின்னாளபட்டி, வேடசந்தூர் பகுதிகளில் இருந்தும் பட்டதாரிகள் வந்து பெட்டியில் விண்ணப்பங்களை போட்டு விட்டு சென்றனர்.

இதுகுறித்து அலுவலர்கள் சிலர் கூறுகையில், ‘10 ஆண்டுகளாக நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தால் சமீபகாலமாக அலுவலக உதவியாளர் பணி, சத்துணவு அமைப்பாளர் பணி, அங்கன்வாடி பணியாளர் பணிக்கு கூட பட்டதாரிகள் விண்ணப்பம் செய்து வருகின்றனர். ஒரு அலுவலக உதவியாளர் பணிக்கு இதுவரை மட்டும் 800 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்’ என்றார்.

Related Stories:

>