பழநியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேருக்கு சிறை

பழநி, ஜன. 22: பழநியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த 2 பேர் சப்கலெக்டர் உத்தரவின்பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். பழநி இடும்பன் நகரை சேர்ந்தவர் கோபி (35). பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் கோபாலகண்ணன். (29). இவர்கள் 2 பேர் மீதும் பழநி டவுன், அடிவாரம் போலீஸ் நிலையங்களில் ெகாலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் இருவரையும் டவுன் போலீசார் கைது செய்து, உதவி கலெக்டர் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

அப்போது இனி எந்த குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என இருவரும் எழுதி கொடுத்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசமுத்திரத்தை சேர்ந்த தேங்காய் வியாபாரியை கடத்தி பணம் பறித்த வழக்கில் கோபி, கோபாலகண்ணனை டவுன் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மீண்டும் குற்றங்களில் ஈடுபட்டதால், குற்றமுறை சட்டத்தின்படி இருவரையும் கைது செய்து சிறையில் அடைக்க உதவி கலெக்டர் அசோகன் உத்தரவிட்டார். அதன்படி கோபி, கோபாலகண்ணனை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>