தீ செயலி குறித்த விழிப்புணர்வு

கெங்கவல்லி, ஜன. 22: தீயணைப்புத்துறையின் சேவைகளை, மக்கள் எளிதில் பெற, ‘தீ’   செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏற்காட்டில் தீ செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, தீயணைப்பு நிலைய  அலுவலர் கணேசன் தலைமையில் நடந்தது. பொதுமக்கள் செல்போனில் உள்ள ப்ளே ஸ்டோரில், தீ  செயலிலை பதிவிறக்கம் செய்து, சுய விபரங்களை பதிய வேண்டும். தீவிபத்து,  வெள்ளம், மழை பாதிப்பு உள்ளிட்ட சமயங்கள் ஏற்படும் போது, தீ செயலியில் உள்ள பட்டனை ஒருமுறை அழுத்தினால், உடடியாக தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு  தகவல் செல்லும். மேலும் பாதிக்கப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள இடம் குறித்த தகவல் ஜிபிஆர்எஸ் மூலம் தெரியவரும்.

இதையடுத்து உடனடியாக  சம்பந்தப்பட்ட தீயணைப்பு  நிலையத்திற்கு தகவல் தெரியப்படுத்தி, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபடுவர்கள். இவ்வாறு நிலைய அலுவலர் கணேசன் தெரிவித்தார். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், பொதுமக்களுக்கு செல்போனில் தீ செயலி பதிவிறக்கம் செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். அதேபோல் கெங்கவல்லி  தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பெரியசாமி தலைமையில், வீரர்கள் நேற்று  கெங்கவல்லி பஸ் நிலையம், கடைவீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு தீ செயலி பயன்படுத்துவது குறித்து விளக்கமளித்தனர்.

Related Stories:

>