கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜன.22: நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பூங்கொடி தலைமை வகித்தார். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது ஊழியருக்கு ₹10 லட்சம், உதவியாளர்களுக்கு ₹5 லட்சம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், பிரேமா, கலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>