மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்

நாமக்கல், ஜன.22: நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நாமக்கல் பரமத்திரோட்டில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகம், நிர்வாக காரணங்களுக்காக கொண்டிசெட்டிப்பட்டி காளியம்மன் கோவிலில் இருந்து, சிங்கிலிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கட்டடத்துக்கு வரும் 1ம்தேதி முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. எனவே, நாமக்கல் இ.பி.காலனி, போதுப்பட்டி, காவேட்டிப்பட்டி, பி.கே.பாளையம், அண்ணாநகர், கொண்டிசெட்டிப்பட்டி, மதுரைவீரன்புதூர், எர்ணாபுரம், கிருஷ்ணாபுரம், கருப்பட்டிப் பாளையம், பெரியப்பட்டி, சிங்கிலிப்பட்டி, தொட்டிப்பட்டி, தும்மங்குறிச்சி கே.சி.பட்டி ஹவுசிங் போர்டு, மணியாரம்புதூர், டி.எஸ்.பி., அலுவலக காவலர் குடியிருப்பு, மகரிஷி நகர், செல்வகணபதி நகர் ஆகிய பகுதி மக்கள், வரும் 1ம் தேதி முதல் கொண்டிசெட்டிப்பட்டி அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>