×

மழையால் அழுகும் வெங்காய பயிர்

நாமக்கல், ஜன.22: நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால், பயிரிட்ட வெங்காயம் அழுகியது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், நிவாரணம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.எருமப்பட்டி வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் குழுவினர், அழுகிய வெங்காய பயிர்களுடன் நாமக்கல் கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அதன் விபரம்: எருமப்பட்டி, பவித்திரம்,தோட்டமுடையான்பட்டி ,பவித்திரம்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் சிறிய வெங்காயம் பயிர் செய்து இருந்தோம். ஆனால், மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, திருகல் நோய் ஏற்பட்டு,சிறிய வெங்காயம் முற்றிலுமாக அழுகிவிட்டது. எனவே, சேதமடைந்த பயிரை நேரில் ஆய்வு செய்து, இழப்பீடு தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்