×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி போலீசார், பெண்கள் பங்கேற்பு

நாமக்கல், ஜன. 22: நாமக்கல்லில் நேற்று வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, பெண்கள் பங்கேற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நல்லிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணியை, கலெக்டர் மெகராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதில், 200க்கும் மேற்பட்ட பெண் போலீசார் மற்றும் மகளிர் திட்ட சுயஉதவிகுழு பெண்கள் ஹெல்மெட் அணிந்தபடி முக்கிய சாலைகள் வழியாக நாமக்கல் டவுன் பூங்காசாலை வரை பேரணியாக வந்தனர். சாலை விதிகளை மதித்து நடக்கவேண்டும் என்ற கோஷங்களை முன்வைத்து பேரணி நடைபெற்றது. பேரணியில், ஏடிஎஸ்பி சுஜாதா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரவிசந்திரன், முருகன், மாதேஸ்வரன், பிஆர்ஓ சீனிவாசன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டியன், டிரைவிங் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.   

Tags :
× RELATED வாக்கு இயந்திரம் பழுது வாக்குப்பதிவு தாமதம்