திமுக உறுப்பினர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி ராஜேஸ்குமார் வழங்கினார்

சேந்தமங்கலம், ஜன.22: காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி 1வது வார்டு திமுக உறுப்பினர் தங்கவேல், கல்குறிச்சி ஊராட்சி வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்த உறுப்பினர் கண்ணன் ஆகியோர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தனர். அவர்களது வீட்டிற்கு நேரில் சென்ற கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து குடும்ப நல நிதியாக தலா ₹5 ஆயிரம் வழங்கினார். இதேபோல காளப்பநாயக்கன்பட்டி திமுக உறுப்பினர் பூபதி விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மருத்துவ செலவிற்காக ₹5 ஆயிரம் வழங்கினார்.இதில் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், பேரூர் செயலாளர் நடேசன், மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம், ஒன்றியக்குழு தலைவர் மணி மாலாசின்னசாமி, மாவட்ட பிரதிநிதி முருகேசன், அன்பழகன், இளம்பரிதி, விஸ்வநாத், குழந்தைவேலு, மாது, சின்னத்தம்பி, நல்லு ராஜேந்திரன், விஜயகுமார், அருள், முருகேசன், செல்வராசு, குழந்தைவேல், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>