திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதியோர் அனைவருக்கும் மீண்டும் உதவித்தொகை

கிருஷ்ணகிரி, ஜன.22: கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நகர திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் நவாப் தலைமை வகித்தார். நகர்மன்ற முன்னாள் தலைவர் பரிதாநவாப் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., பங்கேற்று பேசுகையில், ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்-அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டங்கள் மூலம், மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். இன்னும் 4 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், மக்களின் குறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வைப்பார். அத்துடன் தற்போது நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித்தொகை அனைவருக்கும் மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுப்போம்,’ என்றார். நிகழ்ச்சியில், டேம்.வெங்கடேசன், நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, ராஜேந்திரன், ராஜன் மற்றும் கனல் சுப்பிரமணி, ஜான்டேவிட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். டாக்டர்.சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Related Stories:

>