மாநில அளவிலான கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு

போச்சம்பள்ளி, ஜன.22: கிருஷ்ணகிரி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் சக்ரவர்த்தி விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில், மாநில அளவில் ஆண்களுக்கான மூத்தோர் கபடி போட்டி, வரும் மார்ச் மாதம் திருவண்ணாமலையில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கபடி வீரர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் 23ம் தேதி(நாளை) காலை 9 மணிக்கு நடக்கும் தேர்வில் கலந்துகொள்ளும்படி கேட்டுகொள்கிறேன். தேர்வுக்கு  வரும் வீரர்கள்  85 கிலோ எடைக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் போட்டோ(2), ஆதார் கார்டு அசல் எடுத்து வரவேண்டும். கல்வி சான்று நகல் உடன் எடுத்து வரவும். வயது வரம்பு ஏதும் இல்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>