காலமுறை ஊதியம் வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சூளகிரி, ஜன.22: காலமுறை ஊதியம் வழங்க கோரி, சூளகிரியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில், நேற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. சூளகிரி பழைய பிடிஓ அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள் தலைமை வகித்து பேசினார். அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி,  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்;  ஓய்வூதியத்தை ₹5 லட்சமாக  உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த  போராட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் கவிதா, கஸ்தூரி, சந்திரன், ஜெகதாம்பிகா, தினேஷ், சந்திரன், ஸ்ரீதர், நடராஜன், பார்வதி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories:

>