மத்திய- மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.22: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ஆதார விலை சட்டத்தை தமிழக அரசு இயற்ற வலியுறுத்தியும், மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமை வகித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், மாயவன், ராதாகிருஷ்ணன், அசோகன், குபேந்திரன், ஜெயலட்சுமி, சத்தியவாணி, செம்பட்டி சிவா, பிரபாகர், துரைகுட்டி, முனிசந்திரன், அருண், ரமேஷ், சசிகுமார், சிறுத்தை ராஜா, மாதையன், பாக்கியராஜ், கிருஷ்ணன், முத்துகுமார், மகேந்திரன் மற்றும் வேங்கை வளவன், அன்சர், சிவக்குமார், கணபதி, ஓசூர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, கோஷங்களை எழுப்பினர்.

Related Stories:

>