குறைதீர்க்கும் முகாம்

தேன்கனிக்கோட்டை, ஜன.22: தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் தலைமை தாங்கினார். தாசில்தார் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். முகாமில் கூச்சுவாடி, அனுமந்தபுரம், திப்பசந்திரம், ரத்தினகிரி, இருதுக்கோட்டை, போகசந்திரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு கோட்டாட்சியர் குணசேகரன் பழங்குடியினர் ஜாதி சான்று வழங்கினார்.

Related Stories:

>