×

தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் முறை

தர்மபுரி, ஜன.22: தர்மபுரி மாவட்டத்தில், தென்னை மரங்களில் கருந்தலைப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதை கட்டுப்படுத்த வேளாண்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
தர்மபுரி வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா கூறியதாவது: கருந்தலைப்புழுக்கள் தென்னை மரத்தின் அடிப்பகுதியில் உள்ள ஓலைகளை அதிகம் தாக்குவதால், தென்னை மரக்கொண்டையின் மேற்பகுதியில் உள்ள 3, 4 ஓலைகளைத் தவிர மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய் காணப்படும். அதிகமாக தாக்கப்பட்ட மரங்கள், எரிந்து தீய்ந்து போனது போல் காணப்படும். இதனை கட்டுப்படுத்த பிராக்கானிட் என்ற குடும்பங்களை சேர்ந்த ஒட்டுண்ணிகளை, ஒரு ஹெக்டேருக்கு சுமார் 3ஆயிரம் எண்ணிக்கையில் இலைகளின் அடிப்பாகத்தில் விடலாம். இந்த ஒட்டுண்ணிகளை தென்னை மரக்கொண்டை பகுதியின் மேற்புறம் விட்டால், சிலந்தி போன்ற பூச்சி உண்ணிகள் அவற்றை உண்டு விடும்.
 இலையின் அடிப்பாகத்தில் டைக்ளோரோவாஸ் 100 ஈசி 0.02மூ அல்லது மாலதையான் 50ஈசி 0.05 மூ ராசாயன தெளிப்பு செய்த பின், 3 வாரங்கள் கழித்து பிராக்கானிட் ஒட்டுண்ணிகளை விட வேண்டும். தற்போது தர்மபுரி வட்டாரம் தென்னை ஒட்டுண்ணி மையத்தின் மூலம், பிராக்கானிட் ஒட்டுண்ணிகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : blackhead worm attack ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா