தீயணைப்புதுறை சார்பில் தீ செயலி குறித்த விழிப்புணர்வு

தர்மபுரி, ஜன.22: தர்மபுரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி சார்பில், தீ என்ற செயலி பற்றிய விழிப்புணர்வு முகாம் நேற்று அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் நடந்தது. அப்போது தங்கள் உயிர்களையும் உடமைகளையும் காக்க, தீ செயலியை பதிவிறக்கம் செய்ய பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆனந்த் தலைமையில், தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா மற்றும் தீயணைப்பு வீரர்கள் முகாமில் கலந்து கொண்டனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், ‘தீ என்ற செல்போன் செயலி கடந்தவாரம் சென்னையில் அறிமுகம் செய்து வைத்தனர். தர்மபுரியில் பொதுமக்கள் கூடும் இடங்களில், தீ செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,’ என்றனர்.

Related Stories:

>