தோவாளையில் பூக்கள் விலை சரிவு

ஆரல்வாய்மொழி, ஜன.22: குமரி  மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் இருந்து  பூக்கள் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு செல்கிறது.  குறிப்பாக கேரள வியாபாரிகள் பண்டிகை காலங்களில் போட்டி போட்டு பூக்களை  வாங்கி செல்வார்கள். இங்கு புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை யொட்டி பூக்கள்  விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் 1 கிலோ மல்லிகை ₹1200, பிச்சி ₹650 என விற்பனையானது.  இந்தநிலையில் நேற்று பூக்கள் விலை  வீழ்ச்சி  அடைந்தது. நேற்று 1 கிலோ மல்லிகை ₹800, பிச்சி  ₹500, முல்லை ₹500, கனகாம்பரம் ₹500, கொழுந்து ₹200,  மரிக்கொழுந்து ₹200, சம்பங்கி ₹150, வாடாமல்லி ₹.60, ரோஸ்(பாக்கெட்)  ₹20 பட்டன்ரோஸ் ₹100, மஞ்சள் கிரேந்தி ₹65, ஆரஞ்ச் கிரேந்தி ₹70,  வெள்ளை செவ்வந்தி ₹120, மஞ்சள் செவ்வந்தி ₹120, கோழிப்பூ ₹50, தாமரை  ₹20 என விற்பனை ஆனது. முகூர்த்த தினங்கள் இல்லாததால் பூக்கள்  விலை குறைந்துள்ளது. இன்னும் 2 நாட்களில் மூகூர்த்த தினங்கள் ஆரம்பிக்கும்  அதன்பிறகு படிப்படியாக பூக்கள் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>