செங்கோட்டை பகுதியில் போலீஸ்காரரை மிரட்டியவர் கைது

செங்கோட்டை, ஜன. 22:   தென்காசி மாவட்டம், செங்கோட்டை கண்ணுபுளிமெட்டு பகுதியில் அமைந்துள்ள குண்டாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அங்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை அடுத்து செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையில் போலீசார்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஐயப்பன் என்ற போலீஸ்காரரும் நேற்று காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஜீப்பில் வந்த  கண்ணுபுளிமெட்டு பகுதியை சேர்ந்த இசக்கியின் மகன் இசக்கிதுரை (38) என்பவர் அணையின் உள்ளே செல்ல முயன்றார். இதையடுத்து அவரை பணியில் இருந்த ஐயப்பன் அனுமதி இல்லை என்ற விவரத்தை கூறினார். ஆனால், அதை ஏற்க மறுத்த இசக்கிதுரை, அவதூறாக பேசியதோடு பணிசெய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். மேலும் ஜீப்பை அவர்  மீது ஏற்ற முயன்றாராம்.  புகாரின் பேரில் வழக்குப்பதிந்த செங்கோட்டை எஸ்.ஐ சின்னத்துரை, இசக்கிதுரையை  கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தார்.

Related Stories:

>