வாசுதேவநல்லூர் அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி

சிவகிரி, ஜன. 22:  வாசுதேவநல்லூர் அருகே தேசியம்பட்டி (எ) நாரணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த காசிப்பாண்டி மனைவி கனியம்மாள் (60). விவசாய தொழிலாளியான இவர், சுப்பையாபுரம் அருகே சீதையம்மாள் என்பவரது வயலில்  உளுந்து பயிர்களை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாம்பு, அவரை கடித்தது. இதையடுத்து அவரை மீட்ட சக தொழிலாளர்கள் ஆட்டோ மூலம் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.  இதுகுறித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர்(பொ) அலெக்ஸ்ராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>