வி.கே.புரம் கடையில் திருட்டு

வி.கே.புரம், ஜன. 22.  வி.கே.புரம் டாணா மேட்டுபாளையம் தெருவைச் சேர்ந்த முஸ்தபா மகன் ரதன் (31).   இவர் வி.கே.புரம் மெயின்ரோட்டில் சமையல்  பாத்திரங்கள், சேர்களை வாடகைக்கு விடும் கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு  வியாபாரம் முடிந்து கடையை பூட்டிச்சென்ற இவர், நேற்று காலை கடைக்கு திரும்பினார். அப்போது கடையின் மேற்கூரையில் வேயப்பட்டிருந்த சிமென்ச் சீட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம்  மற்றும் சிசிடிவி கேமரா ரீசிவர் பெட்டி ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து வந்த வி.கே.புரம் போலீசார் விசாரணை  நடத்தினர். மேலும் வழக்குப் பதிந்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

Related Stories:

>