டெல்லி: வங்கதேசத்தில் அடுத்தடுத்து இந்து இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அம்ரித் மண்டல் மற்றும் தீபு சுந்திரதாஸ் என்ற இந்து இளைஞர்கள் வங்கதேசத்தில் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்து இளைஞர்களை கொலை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அதிகாரி ரந்திர் ஜெய்ஸ்வால் கோரிக்கை வைத்துள்ளார். வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக இந்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
