×

ஓட்டப்பிடாரம் தொகுதியில் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வருவாய், வேளாண் துறையினருடன் சண்முகையா எம்எல்ஏ ஆலோசனை

ஓட்டப்பிடாரம், ஜன 22:ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்கள், உரிய நிவாரணம் வழங்குவது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களுடன் எம்எல்ஏ சண்முகையா ஆலோசனை மேற்கொண்டார். ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணை தாசில்தார்கள் ஓட்டப்பிடாரம் கண்ணன், தூத்துக்குடி முரளி, வைகுண்டம் சிவக்குமார், கயத்தாறு பாலசுப்பிரமணியன், கருங்குளம் உதவி வேளாண்மை இயக்குனர் இசக்கியப்பன், புதுக்கோட்டை ஆனந்தன், தொழில்நுட்ப உதவி மேலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். 10 நாட்களாக பெய்த மழையில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் 100 சதவீதம்  தண்ணீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகின. வருவாய், வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகள் பாதிக்காதபடி அரசின் பயன்களை முழுமையாகப் பெறும் வகையில் 100சதவீத கணக்கீடுகளை முறையாக எடுக்க வேண்டும். விவசாயிகள் அனைவருக்கும்  ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கிடவும் பயிர் காப்பீட்டுத் தொகை முழுவதும் உடனே கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சண்முகையாஎம்எல்ஏ, அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.இதில் யூனியன் கவுன்சிலர்கள் நவநீதகிருஷ்ணன், சுகுமார் தங்கரத்தினம், மொட்டையசாமி, அக்கநாயக்கன்பட்டி பஞ்.தலைவர் அய்யாதுரை, மாவட்ட மாணவரணி மாடசாமி, புதியம்புத்தூர் பூவலிங்கம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : constituency ,agriculture department ,Ottapidaram ,Shanmugaiya MLA ,
× RELATED மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம்: வேளாண்துறை ஆலோசனை