தேரிகுடியிருப்பு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்

திருச்செந்தூர், ஜன.22: திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமைஆசிரியர் மெட்டில்டா, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவரும், காயாமொழி பஞ்சாயத்து தலைவருமான ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் யூனியன் சேர்மன் செல்விவடமலைபாண்டியன் தலைமை வகித்து, 26 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதில் அதிமுக முன்னாள் தொகுதி செயலாளர் வடமலைபாண்டியன், யூனியன் கவுன்சிலர் செல்வன், உதவி தலைமை ஆசிரியர் ரம்யா, பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் ராமசாமி, ஆசிரியர்கள் சரவணக்குமார், ராபர்ட், காளிராஜ், கவிதா, விஜயலெட்சுமி, தேரிக்குடியிருப்பு சிவபால், ஐக்கோர்ட், பிரபாகரன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>