பொங்கல் விழாவை முன்னிட்டு கபடி போட்டி

விளாத்திகுளம், ஜன.22: விளாத்திகுளம் அருகே கத்தாளம்பட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாண்டி பிரண்ட்ஸ் கிளப் சார்பில் கபடி போட்டி நடந்தது. சின்னப்பன் எம்எல்ஏ தலைமை வகித்து போட்டியை தொடங்கி வைத்தார். இதில் விளாத்திகுளம், காடல்குடி, புதூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர். முதலிடம் பெற்ற சிவஞானபுரம் அணிக்கு ரூ.20 ஆயிரத்தை வடக்கு மாவட்ட ஜெ.பேரவை இணைச்செயலாளர் குட்லக் செல்வராஜ் வழங்கினார். 2ம் பரிசு ரூ.15ஆயிரத்தை பிஎப்சி கத்தாளம்பட்டி அணியினரும், 3ம்பரிசு ரூ.12 ஆயிரத்தை பிஎப்சிபி அணியினரும், 4ம்பரிசு ரூ.10 ஆயிரத்தை வேம்பாறு அணியினரும், 5ம்பரிசு ரூ.7ஆயிரத்தை இ.வேலாயுதபுரம் அணியினரும், 6வது பரிசு ரூ.6 ஆயிரத்தை கீழ்க்குடி அணியினரும், 7வது பரிசு ரூ.5 ஆயிரத்தை துப்பாஸ்பட்டி அணியினரும், 8ம்பரிசு ரூ.4 ஆயிரத்து முடித்தலை அணியினரும் பெற்றனர்.பரிசுகளை ஓட்டப்பிடாரம் முன்னாள் சேர்மன் காந்தி என்ற காமாட்சி, விளாத்திகுளம் யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், இளைஞரணி இணைச்செயலாளர்கள் ஆவுடையப்பன், இளங்கோ, ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் பசுப்பொன் பழனிச்சாமி, நகர செயலாளர் பொன்பாண்டியன், கன்னிச்சாமி ஆகியோர் வழங்கினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை எம்ஜிஆர் இளைஞரணி இணைச்செயலாளர் வரதராஜபெருமாள், கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் வழங்கினர்.

Related Stories:

>