ஏரல் அருகே பெருங்குளத்தில் ரூ.19 லட்சத்தில் தானிய சேமிப்பு கிடங்கு திறப்பு விழா சண்முகநாதன் எம்.எல்.ஏ பங்கேற்பு

ஏரல், ஜன. 22:  பெருங்குளத்தில் ரூ.19 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள தானிய சேமிப்பு கிடங்கு திறப்பு விழா சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமையில் நடந்தது. ஏரல் அருகே பெருங்குளத்தில் ரூ.19 லட்சத்தில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தானிய சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு திறப்புவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், பெருங்குளம் தொடக்க கூட்டுறவு சங்க தலைவர் ஆஷா சண்முகநாதன் முன்னிலை வகித்தனர். கலெக்டர் செந்தில்ராஜ் தானிய சேமிப்பு கிடங்கை விவசாயிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றிய செயலாளர்கள் வைகுண்டம் மேற்கு காசிராஜன், கிழக்கு அழகேசன், ஆழ்வை மேற்கு ராஜ்நாராயணன், பெருங்குளம் நகர செயலாளர் வேதமாணிக்கம், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் எப்றாயீம், வை. ஜெ.பேரவை செயலாளர் பாஸ்கர், யூனியன் கவுன்சிலர் ரமேஷ், ஜெ.பேரவை நகர தலைவர் அருணாசலம், இளைஞரணி செயலாளர் ராஜா, பெருங்குளம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சந்திரபால், ஏரல் தாசில்தார் இசக்கிராஜ், மண்டல துணை தாசில்தார் சேகர், வெள்ளையா, கிருஷ்ணமூர்த்தி, மணி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>