தண்டராம்பட்டு அருகே முகமூடி கொள்ளையர்கள் 3 பேர் குண்டாசில் கைது

திருவண்ணாமலை, ஜன.22: தண்டராம்பட்டு அருகே முகமூடி அணிந்து கொள்ளையடித்த 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டராம்பட்டு அடுத்த கீழ்செட்டிப்பட்டு கிராமத்தில், கடந்த மாதம் 20ம் தேதி பால் வியாபாரி ராஜா என்பவரது வீட்டுக்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்தபடி நுழைந்து, அங்கிருந்தவர்களை தாக்கி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, கொள்ளை கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில், ஆரணி ஆகாரம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர்(26). சங்கராபுரம் அடுத்த பெருவல்லூர் கிராமத்தை சேர்ந்த கிரி(31), உளுந்தூர்பேட்டை அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்த மாரி(27) ஆகியோர், தொடர் குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்ட 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, எஸ்பி அரவிந்த் பரிந்துரை செய்தார். அதன்பேரில், பாஸ்கர், கிரி, மாரி ஆகியோரை குண்டர் சட்டத்தில் ஓராண்டு சிறையில் அடைக்க கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று உத்தரவிட்டார்.

Related Stories:

>