திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வருக்கு 5 அடியில் வேல் பரிசு: ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர்

திருப்போரூர்: திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, வழக்கறிஞர் ஒருவர் 5 அடியில் பித்தளை வேல் பரிசாக வழங்கினார். திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அருகில், நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். நேற்று முன்தினம் செங்கல்பட்டில் பிரசாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள சக்தி வினாயகர் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதேபோன்று பெரும்புதூரில் ராமானுஜர் கோயிலுக்கும் சென்று வழிபட்டார். ஆனால் திருப்போரூர் பிரசாரத்தின்போது புகழ் பெற்ற கந்தசுவாமி கோயிலுக்கு அருகிலேயே பிரசாரம் செய்தபோது, அக்கோயிலுக்கு செல்லவில்லை.

இதற்கிடையில், திருப்போரூர் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்போரூரை சேர்ந்த வழக்கறிஞர் சிவராமன், 5 அடி உயர பித்தளை வேல் வழங்கினார்.  அதேநேரத்தில், திருப்போரூர் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்பி மரகதம் குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், நந்தகுமார் ஆகியோர் தனியாகவும், முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன் தனியாகவும் வெவ்வேறு இடத்தில் இருந்து வரவேற்பு அளித்தனர்.

Related Stories:

>