மக்கள் கிராம சபை கூட்டம்

திருவள்ளூர், ஜன.21: பூந்தமல்லி நகர திமுக சார்பில்  நகர செயலாளர் பூவை எம்.ரவிக்குமார் தலைமையில், 2,3,4 ஆகிய வார்டுகளில் நிர்வாகிகள் இ.பழனி, வெங்கடேசன், பி.வி.ஜெய்பாபு, ஆரூன் ஷெரீப் முன்னிலையில் அதிமுகவை நிராகரிக்கிறோம் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி  பொது மக்களுடன் உரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அப்போது பொதுமக்கள் அதிமுக ஆட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதியையும் செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டினர். விரைவில் திமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றி தருவதாக எம்எல்ஏ உறுதியளித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் காயத்ரி தரன், எச்.தாஜுதீன், நிர்வாகிகள் சு.அன்பழகன், பிஆர்பி.அப்பர் ஸ்டாலின், டில்லி ராணி மலர்மன்னன், பி.சௌந்தரராஜன், ஜெ.சுதாகர், ஆர்.புண்ணியகோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>