வேலூர் 1வது மண்டலத்தில் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வீணாகும் அவலம்: அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

வேலூர், ஜன. 21: வேலூர் 1வது மண்டலத்தில் தனியார் அமைப்பு மூலம் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கபட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் வீணாகும் நிலைய ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கும் வகையில் முன்கள பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். இதில் தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டு வகையில் தனியார் அமைப்பினர் மூலம் பல்வேறு உதவி செய்தனர்.

இந்நிலையில், வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் உட்பட 630 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் தனியார் அமைப்பு மூலம், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக அவர்களுக்கு ரெயின் கோர்ட், காலனி, பை வழங்கப்பட்டது. அதில் ஒரு சில தூய்மை பணியாளர்களுக்கு மட்டும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது. மீதமுள்ள பாதுகாப்பு உபகரணங்கள், சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வழங்காமல், 2 மாதங்களுக்கு மேலாக 1வது மண்டல அலுவலகத்தில் யாருக்கும் பயன்பாடாமல் அறையிலேயே பாழாகும் நிலையில் கிடக்கிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தூய்மை பணியாளர்கள் வைத்துள்ளனர்.

Related Stories:

>