×

கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்

 

சென்னை: கிறித்தவ தேவாலயங்கள் மீது தாக்குதலுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்; சக மனிதர்களையும் நேசியுங்கள் என்று அன்பையும், காருண்யத்தையும் போதித்த மனிதகுல ரட்சகர் இயேசுநாதரின் பிறந்தநாள் விழாவாக உலகெங்கும் கிறிஸ்தவப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் ராய்ப்பூர், ஜபல்பூர் ஆகிய இடங்களிலும், சதீஸ்கர் மாநிலத்தின் சில இடங்களிலும் கிறித்துவ தேவாலயங்களை தாங்கி, கிறித்தவ மக்களையும் தாக்கிய இந்துத்துவ வெறிக் கும்பலுக்கு பலத்த கண்டனத்தைத் தெரிவிப்பதோடு, அந்த வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Christian ,Vaiko ,Chennai ,MDMK ,General Secretary ,Christians ,Jesus Christ ,
× RELATED சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக...