தேர்தலை முன்னிட்டு 104 போலீசார் மாற்றம்

திருவில்லிபுத்தூர், ஜன.21: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் 104 போலீசார் மாற்றப்பட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 3 ஆண்டை கடந்து காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் மூன்றாண்டுகள் முடிந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை திருவில்லிபுத்தூர் காவல்கோட்டம், ராஜபாளையம் காவல் நிலைய உட்கோட்டம், சிவகாசி காவல் நிலைய உட்கோட்டம், சாத்தூர் காவல் நிலைய உட்கோட்டம், திருச்சுழி காவல் நிலைய உட்கோட்டம் மற்றும் அருப்புக்கோட்டை காவல்நிலைய உட்கோட்டம், விருதுநகர் காவல் கோட்டம் ஆகிய காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகளை கடந்து பணிபுரிந்து வந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 104 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>