ஆளை கொல்லும் சாலையில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

அருப்புக்கோட்டை, ஜன.21: அருப்புக்கோட்டை  பாளையம்பட்டி விலக்கில் தொடங்கி ராமசாமிபுரம் விலக்கு வரை மொத்தம் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையில்  கட்டங்குடி, செம்பட்டி, தொட்டியங்குளம், காந்திநகர், கஞ்சநாயக்கன்பட்டி, ராமசாமிபுரம் ஆகிய கிராமங்களுக்கான சாலைகள் இணைகின்றன. இக்கிராமங்களுக்கான சாலை விலக்குகளில் வாகனங்களிலோ அல்லது நடந்தோ புறவழிச்சாலையைக் குறுக்காகக் கடக்கும் கிராமத்தினர் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால் பல உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக கட்டங்குடி சந்திப்பில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

எனவே  இச்சாலை விலக்குகளில் விபத்தை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  அருப்புக்கோட்டை டவுன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணக்குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அமர்நாத் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேலாளர் பிரபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அபாய எச்சரிக்கை விளக்கு அமைக்கவும், எச்சரிக்கை போர்டு வைக்கவும், எப்போதும் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய உயரமான ஒளிர்விளக்குக் கம்பம் அமைக்கவும், ஒளிர்விளக்குகளுடன் கூடிய கோடுகள் அமைத்திடவும் திட்டம் வரையறை செய்யப்பட்டது. விரைவில் அனைத்து நடவடிக்கைகளும் நான்குவழிச்சாலையில் அமைந்துள்ள  அனைத்து கிராமச்சாலை விலக்குகளிலும் அமைக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>