குப்பையால் பயங்கர ‘கப்’

ராஜபாளையம், ஜன.21: ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்தாமல் தேசிய நெடுஞ்சாலைகளில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘நகராட்சியின் பொது இடங்களை பலரும் ஆக்கிரமித்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் கடும துர்நாற்றம் வீசுவதுடன் அதிகளவு கொசுக்களும் உற்பத்தியாகி தொற்று நேரம் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் அதிக வாகனங்கள் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையோரங்களிலும் தொடர்ந்து குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத நிலையே நீடித்து வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் தனிநபர் ஆக்கிரமிப்பு இடங்கள், தேசிய நெடுஞ்சாலைகளில் குப்பைகளை கொட்டுவதை தடுத்து நிறுத்துவதுடன், அதனை முறையாக சேகரித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>