அம்மன்பட்டியில் அம்மா மினி கிளினிக் திறப்பு

திருச்சுழி, ஜன.21: திருச்சுழி அருகே நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மன்பட்டி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்புவிழா நேற்று நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் அமைச்சர் பேசுகையில், இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 42 மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் பல கிராமங்களில் திறக்கப்பட உள்ளன என்றார்.

நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பழனிச்சாமி, அருப்புக்கோட்டை ஆர்டிஓ பழனிச்சாமி, நரிக்குடி ஒன்றிய துணை சேர்மனும், நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளருமான அம்மன்பட்டி ரவிச்சந்திரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பிரபாத்வர்மன், நரிக்குடி ஒன்றிய சேர்மன் பஞ்சவர்ணம் பால்சாமி, விருதுநகர் மாவட்ட  பண்டக சாலை தலைவர் அம்மா சரவணன், வேளாண் ஊரணி ஊராட்சி மன்ற தலைவர் அங்காளஈஸ்வரி, கூட்டுறவு சங்க தலைவரும், மேற்கு ஒன்றிய துணை செயலாளருமான ராமசுப்பிரமணியன், 12வது வார்டு கவுன்சிலர் இந்திராணி, விருதுநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அரசு ஒப்பந்தகாரர் கவுதமராஜா உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>