×

திருவாரூர் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத சொத்துகள் மீட்பு முகாம்

திருவாரூர், டிச. 25: மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிதி சொத்துகள் தொடர்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி உரிமை கோரப்படாத நிதி மீட்பு முகாம் 29.12.2025 நடைபெற உள்ளது என கலெக்டர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திருவாரூர் கலெக்டர் மோகனசந்திரன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்த முகாம் 29.12.2025 (திங்கட்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும். இந்த முகாமில் அனைத்து வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் உள்ள சேமிப்பு கணக்குகள், நிலையான வைப்பு கணக்குகள், காப்பீடு தொகைகள், பங்கு தொகைகள் உள்ளிட்ட நிதி சொத்துகளை உரிய ஆவணங்களுடன் வழங்கி பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், உரிமை கோரப்படாத தொகைகள் குறித்து https://udgam.rbi.org.in மூலம் அறிந்து கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களுக்குரிய நீண்ட கால உரிமை கோரப்படாத தொகைகளை மீட்டெடுக்குமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags : Tiruvarur District ,Tiruvarur ,Reserve Bank ,Tiruvarur Collector… ,
× RELATED ஜவுளி சங்க பொதுக்குழு கூட்டம்