இடைப்பாடி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

இடைப்பாடி, ஜன.21: இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள், நேற்று முன்தினம் முதல் செயல்பட துவங்கியுள்ளது. தலைமை  ஆசிரியை கீதாராணி தலைமையில்,  துணை தலைமை ஆசிரியர் ராஜமாணிக்கம்,  ஆசிரியர்கள் கமலக்கண்ணன், பரந்தாமன், ரத்தினசாமி ஆகியோர் முககவசம் அணிந்து வந்த மாணவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர்  மூலம் வெப்ப பரிசோதனை செய்தனர். கிருமி நாசினி கொடுத்து கைகளை சுத்தப்படுத்த செய்து, அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி மாணவர்களை சமூக இடைவெளியுடன் வகுப்பறையில் அமரவைத்து பாடம்  நடத்தினர்.

Related Stories:

>