இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 6 சட்டமன்ற தொகுதிகளில் 14.41 லட்சம் வாக்காளர்கள் 39 ஆயிரம் பேர் புதிதாக சேர்ப்பு

நாமக்கல், ஜன.21: நாமக்கல் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 14. 41 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதிதாக 39 ஆயிரத்து 357 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று கலெக்டர் மெகராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதியில், இறுதி வாக்காளர் பட்டியல்படி, ராசிபுரம் (தனி)  தொகுதியில் 1 லட்சத்து 51,061 ஆண் வாக்காளர்கள், 84 ஆயிரத்து 984 பெண் வாக்காளர்கள். மற்றவர்கள் 15 என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 60 வாக்காளர்கள் உள்ளனர். சேந்தமங்கலம் தொகுதியில் ஒரு லட்சத்து 18,702 ஆண்கள், ஒரு லட்சத்து 23,842 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 25 என மொத்தம் 2 லட்சத்து 42,569 வாக்காளர்கள் உள்ளனர். நாமக்கல் தொகுதியில் ஒரு லட்சத்து 24,210 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 32,792 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 46 என மொத்தம் 2 லட்சத்து 57,048 வாக்காளர்கள் உள்ளனர்.

பரமத்திவேலூர் தொகுதியில் ஒரு லட்சத்து 6,572 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 14,408 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 6 என மொத்தம் 2 லட்சத்து 20,986 வாக்காளர்கள். திருச்செங்கோடு தொகுதியில் ஒரு லட்சத்து 12,125 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 18,154 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 37 என மொத்தம் 2 லட்சத்து 30,316 வாக்காளர்கள் உள்ளனர். குமாரபாளையத்தில் ஒரு லட்சத்து 24,334 ஆண் வாக்காளர்கள், ஒருலட்சத்து 29,857 பெண் வாக்காளர்கள், மற்றவர்கள் 31 என மொத்தம் 2 லட்சத்து 54,222 வாக்காளர்கள் உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 6  தொகுதியிலும் சேர்த்து மொத்த ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 11 ஆயிரத்து 04, பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 39 ஆயிரத்து 937, மற்றவர்கள் 160 என மொத்தம் 14 லட்சத்து 41 ஆயிரத்து 201 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 39,357 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 25 ஆயிரத்து 883.தற்போது புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் 39357 பேர். நீக்கம் செய்யப்பட்டவர்கள் 24039 பேர்.  இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, வருவாய்கோட்டாட்சியர் கோட்டைகுமார், திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், நகர பொறுப்பாளர் சிவக்குமார், அதிமுக நகர பொருளாளர் ராஜா, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>