சேலம் தரண் மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு அனுமதி

சேலம், ஜன.21: தமிழகம்  முழுவதும்,  தற்போது தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி  போடுவதற்கான அனுமதியை அரசு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள  தனியார் மருத்துவமனைகளில், சீலநாயக்கன்பட்டி தரண்  மருத்துவமனைக்கு  கொரோனா  தடுப்பூசி போடுவற்கான அனுமதியை, அரசு வழங்கியுள்ளது. இதையடுத்து தரண்  மருத்துவ மனையில் நேற்று முதல்  தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டது.  முதல் தடுப்பூசியை நுரையீரல் துறை தலைமை மருத்துவர் டாக்டர் சித்துராஜ்  போட்டுக்கொண்டார். இதுகுறித்து தரண் மருத்துவமனையின் மேலாண்மை  இயக்குனர் டாக்டர் செல்வராஜா கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் தனியார்  மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி, முதலாவதாக தரண்  மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது. சேலத்தில் பணிபுரியும் அனைத்து தனியார் மருத்துவமனை  மருத்துவர்கள், செவிலியர்களும் இங்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக  போட்டுக்கொள்ளலாம்,’ என்றார்.   ...

Related Stories:

>