கிருஷ்ணகிரி-திண்டிவனம் நெடுஞ்சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரி, ஜன.21: கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: திண்டிவனம்-கிருஷ்ணகிரி  தேசிய நெaடுஞ்சாலை விரிவாக்க பணிகள் கடந்த 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர், கிடப்பில் போடப்பட்டதால், மீண்டும் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ₹434 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்த நிறுவனம், பணிகளை  மேற்கொள்ள காலதாமதம் செய்ததால், ஒப்பந்த தொகை  அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர், தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்துடன் காணொலி மூலம் ஆலோசனை  மேற்கொண்டனர். அப்போது, சாலை  விரிவாக்க பணியை, கிருஷ்ணகிரியில் இருந்து தொடங்க வேண்டும். ஒப்பந்தத்தை  2-ஆக பிரித்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.இதையடுத்து,  கிருஷ்ணகிரியில் இருந்து சாலை விரிவாக்க பணிகள் தொடங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு  தளர்விற்கு பிறகு பணிகள் தொய்வாக நடந்ததால், கடந்த 6ம் தேதி டெல்லியில்  அலுவலர்களை சந்தித்து, ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை  விடுத்தேன். அப்போது, ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் பணிகளை  விரைந்து முடித்து தருவதாக உறுதியளித்தனர். மார்ச் 31ம் தேதிக்குள் ₹80 கோடிக்கு பணிகள் முடிக்காவிட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அலுவலர்கள் எழுத்துப்பூர்வமாக கடிதம்  அளித்துள்ளனர். மேலும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலரை  நியமித்து உள்ளனர். இவ்வாறு எம்பி தெரிவித்தார்.

அப்போது,  மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், மாநில செயலாளர் ஆறுமுகம், மாநில  செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், மாநில எஸ்சி துறை துணை அமைப்பாளர்  ஆறுமுகசுப்பிரமணியம், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் லலித்ஆண்டனி  உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories:

>