தீ செயலி குறித்து விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி, ஜன.21: கிருஷ்ணகிரியில் தீ செயலி குறித்து பொதுமக்களிடம் செயல் விளக்கம் மூலம் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி நிலைய அலுவவர் மோகன்குமார் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, செல்போனில் தீ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்வது. செல் போன் என்னை பதிவு செய்வது. இருப்பிடத்தை இயக்குவது போன்றவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதே போல் கிருஷ்ணகிரி, பர்கூர், ஓசூர் சிப்காட், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ஆகிய 7 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

போச்சம்பள்ளி:  தமிழ்நாடு முழுவதும் ஆன்ட்ராய்டு போன் மூலம் தொடர்பு கொள்ள, பொதுமக்களிடத்தில் தீ செயலி மூலம் தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். போச்சம்பள்ளி தீயணைப்பு சார்பில் போச்சம்பள்ளி, தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் தீ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதில் பொதுமக்கள் தங்கள் செல்போனில் உள்ள ஆப் மூலம் தீயணைப்பு துறையினரை தொடர்பு கொண்டால், தீ விபத்து மற்றும் மீட்பு பணிகள் பணிகளை உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

Related Stories:

>